சென்னை: உலக அளவில் கார் பந்தயப் போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரின் வாழ்த்தைத் தொடர்ந்து தற்போது அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் அஜீத்தை வாழ்த்தியுள்ளனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. அதில் விஜய் பேசிய பேச்சால் திமுக வட்டாரத்தில் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில் விஜய்யின் சம கால போட்டியாளரான அஜீத் பக்கம் துணை முதல்வர் உள்ளி்டடோர் வாழ்த்து தெரிவித்திருப்பது கவனம் ஈர்ப்பதாக உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். தமிழ் சினிமாவில் நடிப்பின் திறமையால் தனக்கென்றே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேக் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துக்கு நடிப்பை தாண்டி பைக் மற்றும் கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக சினிமாவில் என்ட்ரி ஆவதற்கு முன்பிருந்தே பைக் ரேஸில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்று வந்தவர்.
பைக் ரேஸ் மட்டுமல்லாமல் 2000 ஆண்டு முதல் 10 வருடங்களாக எப்3 போன்ற கார் ரேஸில் பங்கேற்றவர். சமீப காலமாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் அஜித் அவ்வப்போது நண்பர்களுடன் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகி உள்ள நிலையில் தற்போது உலக அளவில் துபாயில் நடைபெற உள்ள GT3 கார் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் அஜித். அதே நேரத்தில் அஜித் பாதுகாப்பு உடையுடன் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகினது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அஜித்துக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் உலக அளவில் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது, உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.
இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு
தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், முதலமைச்சர் மு க ஸ்டாலின்
அவர்கள் தலைமையிலான நமது திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் - Formula4 Chennai Racing Street Circuit போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு எங்கள் அன்பும், நன்றியும்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழ்நாட்டுக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள் அஜித் சார் என்று கூறியுள்ளார்.
இதேபோல அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் அஜீத்தை வாழ்த்தியுள்ளனர். திமுகவினர் பலரும் கூட சமூக வலைதளங்களில் அஜீத்தை வாழ்த்தி போஸ்ட் போட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}