சென்னை: திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில், புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.
சென்னையை அடுத்த பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுக அரசு கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. திரை கலைஞர்களின் நலனில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னையை அடுத்த பையனூரில் கலந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூபாய் 1000 என 99 ஆண்டுகளுக்கு கலைஞர் அவர்கள் குத்தகைக்கு கொடுத்திருந்தார். அரசு ஆணையின் படி வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சினிமா திரைப்பட தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}