ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் வீட்டுக்குள் ராத்திரியில் புகுந்த துணை தாசில்தார் ஆனந்த் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.
பதவி உயர்வு தொடர்பாக ஸ்மிதா சபர்வாலுடன் ஆலோசனை நடத்துவதற்காக வீட்டுக்குள் புகுந்ததாக கூறியுள்ளார் ஆனந்த் ரெட்டி. அவருக்குத் துணையாக வந்து காரில் வெளியில் காத்திருந்த ஆனந்த் ரெட்டியின் நண்பரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஸ்மிதாவின் பங்களா உள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து நேற்று டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் ஸ்மிதா சபர்வால். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் அபாயகரமான அனுபவத்தை நான் சந்திக்க நேரிட்டது. இரவில் ஒருவர் எனது வீட்டுக்குள் புகுந்து விட்டார். எனது சமயோஜிதத்தால் என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். என்னதான் உங்களது வீடு பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும், படுக்கப் போவதற்கு முன்பு கதவுகள், ஜன்னல்கள் சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ஸ்மிதா.
ஸ்மிதா சபர்வால் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனந்த் ரெட்டி, மல்கஜ்கிரி மாவட்டம் மெட்சால் பகுதியில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு தொடர்பாக அவர் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்கு வந்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு எதற்கு ராத்திரியில் வீடு புக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}