சென்னை: என்னைப் பற்றி அருவருப்பாக பேசுவதை நிறுத்த வேண்டும். மாநில அரசியலில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு நபர் கீழ்த்தரமான, பொருத்தமற்ற கருத்தை கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது பெயரை சம்பந்தம் இல்லாமல் இழுப்பதை நிறுத்த வேண்டும் என்று நடிகை திரிஷா தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா பெயரைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. பல்வேறு கட்சித் தலைவர்களும் நயினார் நாகேந்திரன் கருத்து சரியல்ல என்று தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கூட , நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை திரிஷா தற்போது மெளனம் கலைத்துள்ளார். தனது வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் மூலம் ஒரு அறிக்கை விடுத்துள்ளார் திரிஷா. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது கட்சிக்காரர் திருமதி. த்ரிஷா கிருஷ்ணன் (பிரபல இந்தியத் திரைப்பட நடிகை) அவர்கள் அளித்த அறிவுறுத்தலின்படி, பின்வருவனவற்றை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
ஊடகங்களில் எனது கட்சிக்காரரைப் பற்றிப் பரவி வரும் அருவருப்பான கருத்து தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
மாநில அரசியலில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு கீழ்த்தரமான மற்றும் பொருத்தமற்ற கருத்தைக் கூறுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
எனது கட்சிக்காரர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல என்பதையும், எதிர்காலத்தில் சேரும் எண்ணம் அவருக்கு இல்லை என்பதையும் மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும், கடந்த காலங்களில் அவர் தொடர்ந்து கூறி வருவது போலவே, அரசியல் என்று வரும்போது அவர் எப்போதும் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.
எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அடையாளம் காணப்பட விரும்புகிறாரே தவிர, எந்தவொரு அரசியல் சார்பினாலும் அல்ல. மேலும் மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை பொது விவாதப் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான கருத்தாகும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனது கட்சிக்காரருக்கும் சம்பந்தமில்லாத விவகாரங்களில் அவரது பெயரை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை திரிஷா குறித்து இனிமேல் யாராவது சம்பந்தம் இல்லாமல் பேசினால் சட்ட நடவடிக்கை பாயும் என்பதையே மறைமுகமாக இந்த அறிக்கை மூலம் திரிஷா உணர்த்தியிருப்பதாக தெரிகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}