எல்லாம் மோடிஜி கொடுத்தது.. மகளிர் ஆணைய உறுப்பினரானதும் குஷ்பு போட்ட முதல் ட்வீட்

Mar 01, 2023,10:55 AM IST
புதுடில்லி : நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் குஷ்பு, தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்ற பிறகு பதிவிட்டுள்ள முதல் ட்வீட்டிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.



1980 களில் இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. ஏறக்குறைய தென்னிந்திய சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடன் நடித்த குஷ்புவிற்கு ரசிகர்கள் மிக அதிகம். தென்னிந்தியாவிலேயே நடிகை ஒருவருக்கு முதலில் கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவிற்கு தான். அதிக காதல் கிசுகிசுக்களில் சிக்கிய நடிகையும் இவராக தான் இருக்க முடியும்.



பல நடிகர்களுடனும் கிசுகிசுக்கப்பட்ட குஷ்பு, டைரக்டர் சுந்தர்.சி.,யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நடிகைகள் பலர் காதல் திருமணம் செய்து கொண்டாலும், திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் காதலை கொண்டாடும் ஒரே நடிகை குஷ்பு மட்டுமே. தனது கணவரின் பிறந்த நாள், அவரிடம் காதலை வெளிப்படுத்திய நாள், திருமண நாள், காதலர் தினம் என அனைத்திற்கும் காதல் ரசம் சொட்ட இவர் பதிவிடும் போஸ்டிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிப்பு, தயாரிப்பு, குடும்பம் என பிஸியாக இருந்த குஷ்பு திடீரென அரசியலுக்கு வந்தார். முதலில் திமுக.,வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கிய குஷ்பு, பிறகு திமுக.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அதற்கு பிறகு அங்கிருந்தும் விலகிய குஷ்பு சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். திடீரென உடல் உடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியதால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென பாஜக.,வில் இணைவதாக அறிவித்தார்.

பாஜக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு, தோல்வியை சந்தித்தார். இருந்தாலும் அவருக்கு பல பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் பதவியும் குஷ்புவிற்கு வழங்கப்பட்டது. தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்ற போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, எங்கள் தலைவர் மோடி ஜி மற்றும் ஷர்மா ரேகா ஜி ஆகியோரின் ஆசியுடன் இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். எங்கள் தேவிகளின் நலன்கள் வாழ்க்கை முழுவதும் காப்பதற்கு நான் செல்லும் வழியில் உங்களின் பிரார்த்தனைகளும், ஆதரவும் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக ஒரு முக்கியப் பொறுப்பில் அமர்ந்துள்ள குஷ்புவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

அதிகம் பார்க்கும் செய்திகள்