அஜித் என்னை ஏமாத்திட்டாரு... பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்

Jul 12, 2023,09:08 AM IST
சென்னை : நடிகர் அஜித்குமார் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ள பகிரங்க குற்றச்சாட்டு மீடியாக்களை மட்டுமல்ல தமிழ் சினிமா உலகையே பரபரக்க வைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தயாரிப்பாளர் மற்றும் சக தொழிலாளர்கள் மீது அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவர் என இன்ட்ரீயில் பெயர் வாங்கியவர். தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்து விடக் கூடாது என்பதால் ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் கமிட்டாகும் பழக்கம் கொண்டவர்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் பெரிய பட்ஜெட் படமாக தயாராக உள்ளது. அஜித்தின் சமீபத்திய போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றம்சாட்டி உள்ளார்.




கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை தயாரித்து பிரபலமானவர் மாணிக்கம் நாராயணன். மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த மாணிக்கம் நாராயணன், தனது பெற்றோர்களை விடுமுறைக்காக மலேசியா அனுப்ப வேண்டும் என்பதற்காக அஜித் பல வருடங்களுக்கு முன் என்னிடம் பணம் வாங்கினார். கடனாக வாங்கிய பணத்தை அவர் திருப்பி தரவேயில்லை. 

அந்த பணத்தை நான் திருப்பிக் கேட்ட போது, எனக்காக ஒரு படம் நடித்து தருவதாகவும், அந்த படத்திற்கான சம்பளத்தில் அந்த தொகையை கழித்துக் கொள்ளும் படியும் அஜித் கூறினார். ஆனால் இன்று வரை பணத்தையும் திருப்பி தரவில்லை, படமும் நடித்து தரவில்லை. அதற்கு பிறகு இத்தனை வருடங்களில் அவர் இது பற்றி பேசவும் இல்லை. அவர் தன்னை ஜென்டில்மேன் என சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் அப்படி கிடையாது. 


பல வருடங்களுக்கு முன் நானும் அஜித்தின் மனைவி ஷாலினியும் நல்ல நண்பர்கள். அவர் மிகவும் நல்லவர். அஜித்திற்கு மிக நல்ல குடும்பம் உள்ளது. அவர் ஒரு படத்திற்கு ரூ.50 கோடியும், அதற்கு மேலும் சம்பளமாக வாங்குகிறார். அப்படி இருக்கும் போது என்னை போன்றவர்களை ஏமாற்றுவதால் அவருக்கு என்ன கிடைக்க போகிறது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் போன்றவர்கள் அஜித்தை வைத்து படம் தயாரித்து பணத்தை இழந்துள்ளனர். ஆனால் அவர் அவர்களுக்கு எந்த உதவியும் செய்தது கிடையாது என தெரிவித்துள்ளார்.

செவன்த் சேனல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்தான் நாராயணன். இவர் புதிய தென்றல், கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், முன்தினம் பார்த்தானே, வித்தகன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவரது செவன்த் சானல் நிறுவனம் டிவி சீரியல்களையும் கூட தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்