திடீர் உடல்நலக்குறைவு... நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

Feb 22, 2023,02:46 PM IST
சென்னை : முன்னணி நடிகரான நடிகர் பிரபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக நடிகர் பிரபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபுவுக்கு யூரிடெரோஸ்கோபி லேசர் முறையில் அறுவை சிகிச்சை நேற்று செய்யப்பட்டது. அதில் அவரது சிறுநீரகத்தில் இருந்த கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 



லேசர் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரபு, பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஓய்விற்கு பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு, 1980 களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த பிரபு இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் பிரபு நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹீரோவாக மட்டும் நடித்து வந்த பிரபு, தற்போது சப்போர்டிங் ரோல்களிலும் நடித்து வருகிறார். 

கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் பிரபு நடித்திருந்தார். இது பிரபு - விஜய் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாகும். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கேரக்டரில் பிரபு நடித்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் பிரபு நடித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்