மு.க.ஸ்டாலின் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்.. பரூக் அப்துல்லா புகழாரம்

Mar 02, 2023,01:11 PM IST
சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் பதவியில் தாராளமாக அமரலாம். அதற்கு அவர் பொருத்தமானவர் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.



சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக மாலையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பரூக் அப்துல்லாவிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பரூக் அப்துல்லா கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தால்தான் பாஜகவை வெல்ல முடியும். அப்படி வெல்லும்போது பிரதமர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைக் கூட அமர்த்தலாம். அதற்கு  அவர் பொருத்தமானவர்.




2024 தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சந்தித்தால் மட்டுமே மக்களை பிரிவினைவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற முடியும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு வலிமையான தலைவர் தேவை. அதற்கு ஸ்டாலின் பொருத்தமானவர்.

ஏன் ஸ்டாலின் பிரதமராகக் கூடாது.. அவருக்கு தகுதி இல்லையா என்ன.. தாராளமாக  அவர் பிரதமராக முடியும். திமுகவும், மு.க.ஸ்டாலினும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்.  தேசிய ஒற்றுமைக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கக் கூடிய தகுதி திமுகவுக்கு உண்டு என்றார் பரூக் அப்துல்லா.

எதிர்க்கட்சிகளிடம் இதுதான் மிகப் பெரிய குறையாக இருக்கிறது. பிரதமர் பதவிக்கு ஏகப்பட்ட பேர் போட்டியில் உள்ளனர். நிதீஷ் குமாருக்கும் ஆசை இருக்கிறது. மமதா பானர்ஜிக்கும் ஆசை உண்டு. சந்திரசேகர ராவுக்கும் பிரதமர் பதவி மீது கண் உண்டு. இந்த நிலையில் போட்டியில் மு.க.ஸ்டாலினையும் இழுத்து விட்டுள்ளார் பரூக் அப்துல்லா.

மறுபக்கம் நரேந்திர மோடிதான் அடுத்த முறையும் பிரதமர் என்று பாஜக தெளிவாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி அமையும், அது வலுவாக இருக்குமா என்பது தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!

news

நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்