மதுரை குலுங்க குலுங்க.. 24 ஆம் தேதி.. ஜல்லிக்கட்டு அரங்கத்தில்.. 9312 காளைகள் Vs 3669 காளையர்கள்!

Jan 22, 2024,06:59 PM IST

மதுரை: ஜனவரி 24ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு செய்துள்ள காளைகள் மற்றும் காளையர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.


இதில் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 காளையர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.


மதுரை அலங்காநல்லூரில், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அலங்காநல்லூர்  மேங்கிப்பட்டி கீழக்கரையில் 44 கோடி  ரூபாய் செலவில்,மிகப் பிரம்மாண்டமான அதிநவீன வசதியுடன் கூடிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டது.




இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தை வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுஉள்ளார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மாடு பிடி வீரர்கள் செல்லும் இடம், அவசரக்கால வழி, உரிய பாதுகாப்பு தடுப்புகளும் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இந்த புதிய அரங்கத்தில் திறப்பு விழா கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அரங்கத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த போட்டியில் பங்கு பெற பல்வேறு நிபந்தனைகளும் வரையறுக்க பட்டிருந்தது .இதனை ஏற்ற மாடுபிடி வீரர்களும் மற்றும் காளை உரிமையாளர்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த முன்பதிவுக்கான விவரம் தற்போது வெளியாகி உள்ளன.


இதன்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு பங்கேற்க 9,312 காளைகளும் 3,669 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்