அண்ணா பல்கலை வழக்கு.. ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை + 90,000 அபராதம்!

Jun 02, 2025,06:28 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


 அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஆளும் கட்சிக்கு தொடர்புடையவர் என  கூறி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது‌. ஆனால் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் வாக்குமூலம் அளித்தனர். 


இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த மே 28ஆம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என  தீர்ப்பளித்திருந்தது. மேலும் ஜூன் இரண்டாம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. 




இந்நிலையில், சென்னை மகளிர்  நீதிமன்ற அறிவிப்பின்படி, இன்று(ஜூன் 2)  அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி வழக்கில் தண்டனை விபரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி, 

குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையுடன், ரூ.90,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்துள்ளார். 


அதன்படி, கொலை மிரட்டல் விடுத்தலுக்கு 7ஆண்டுகள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபதாரம் 


பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அளித்தலுக்கு 3 ஆண்டுகள்  மற்றும் 10,000 அபதாரம்


தனிநபர் அந்தரங்க உரிமைகளை  மீறுதலுக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் 10,000 அபதாரம் 


விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்-3  மாதங்கள், 


சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தல்- 1 மாதம், 


உடலில் காயத்தை ஏற்படுத்துதல்-ஒரு ஆண்டு, 


பாலின ரீதியான தாக்குதல்- மூன்று ஆண்டுகள் 


கடுமையான தாக்குதல் ஏழு ஆண்டுகள் மற்றும் ரூ.10,000அபதாரம், 


பாலியல் வன்கொடுமைக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபதாரம் என 

மொத்தம் 90 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

அதிகம் பார்க்கும் செய்திகள்