சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு மாணவர் சேர்க்கைக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகளில் ஒன்றாக நவராத்திரி தின விழா. ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இந்த நவராத்திரி ஒன்பது நாட்கள் நிறைவடைந்து பிறகு, பத்தாவது நாளில் வருவது தான் விஜயதசமி திருநாள்.

இது அம்பிகை அசுரனை வென்ற நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த நன்னாளில் தொழில்கள் சிறக்க தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பூஜை செய்தும், குழந்தைகளின் கல்வி சிறக்க முதன் முதலில் எழுத ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியும் இந்த நாளில் செய்வது தான் வழக்கம். மேலும் இந்த நாளில் தொடங்கும் ஒவ்வொரு நிகழ்வும் வெற்றியடையும் என்பதால் குழந்தைகளின் முதல் கல்வியை இந்த நாளில் பெற்றோர்கள் பதிவு செய்ய எண்ணுகின்றனர்.
அதனால் வெற்றிக்குரிய விஜயதசமி நாளில் துவங்கப்படும் காரியங்கள் அனைத்தும் அம்பிகையின் அருளால் வெற்றிகரமாக முடியும் என்பதை ஐதீகமாக இந்துக்கள் கருதுகின்றனர். அந்த வரிசையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது புதிய மாணவர்களை மாலை அணிவித்து தேவகோட்டையில் முக்கிய வீதிகளின் வழியாக பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் முத்துலட்சுமி, ஸ்ரீதர், முத்துமினாள், ஆகியோர் புதிதாய் சேர்ந்த மாணவர்களை வரவேற்றனர். அப்போது ஆசிரியர்கள் புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து நெல்மணிகளில் அ கரம் எழுத வைத்து, அ ஆ சொல்ல வைத்தனர். அதேபோல் திருக்குறள் வாசிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. பின்னர் புதிதாய் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}