சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பள்ளி சார்பாக வாழ்த்தும் பாராட்டும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் படித்து வருபவர் மாணவி மா.கனிஷ்கா. இவரது தந்தை தினக்கூலி. தாயாரும் தினக்கூலி. ஆனால் தனது குடும்பத்தின் ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மாணவி விடாமுயற்சியுடன் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, ஆசிரியர்களின் முயற்சியால், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் கலந்துகொண்ட மாணவி மா.கனிஷ்கா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதற்காக மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரூபாய் 2000 பரிசுக்கான காசோலையையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார். அப்போது இவர்களுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமியும் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்ற இப்போட்டியில் தேவகோட்டை பள்ளியை சேர்ந்த மாணவி கனிஷ்காவும் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறப்பு பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் முத்துலட்சுமி, முத்துமீனாள், ஸ்ரீதர், மற்றும் பெற்றோர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}