- ஸ்வர்ணலட்சுமி
தந்தேராஸ் அல்லது தன்தேரஸ் அல்லது தன்தேராஸ் என்ற வடமொழி சொல்லில் தன் என்பது செல்வத்தையும், தேராஸ் என்பது 13வது நாளையும் குறிக்கும். அதாவது ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் 13வது நாளான திரியோதசி அன்று தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. அதனால் இதற்கு தன்திரயோதசி என்றும் பெயர்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. இது தன்வந்திரி பகவான் அவதரித்த நாள் என்பதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகுவதற்கு மக்கள் வழிபடுவார்கள் நடத்துவதுண்டு. அதே போல் செல்வம் பெருகுவதற்கு செல்வம் பெருகுவதற்கு லட்சுமியையும், குபேரரையும் வழிபடுவது உண்டு.

இந்த ஆண்டு தீபாவளி 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பு தன்திரயோதசி அக்டோபர் 29ம் தேதியான செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாலை 06.34 மணி துவங்கி இரவு 08.13 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு மிகவும் ஏற்ற நேரமாகும். இந்த பூஜையை இந்த ஒரு மணி நேரம் 42 நிமிடங்களோ அல்லது இன்று துவங்கி தொடர்ந்து 48 நாட்களோ செய்யலாம்.
எளிமையாக வீட்டில் லட்சுமி குபேரரை வழிபடுவதற்கு, வீட்டில் தீபம் ஏற்றி வைத்து, "ஓம் ஸ்ரீ லக்ஷ்மி குபேராய நமஹ" என்ற மந்திரத்தை 9 அல்லது 108 முறை சொல்லலாம். முடிந்தவர்கள் 9 அல்லது 108 நாணயங்கள் வைத்து குபேரருக்கு அர்ச்சனை செய்யலாம்.

இந்த பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பூஜையை செய்வதால் நம் மனதிற்கு அமைதி, குடுத்தில் நிலைத்த செல்வம், தன தான்யம் நிறைந்து நிலைத்து இருக்கும். உணவை கூட போதும் என்று சொல்லுவோம். ஆனால் செல்வத்தை போதும் என்று சொல்ல மாட்டோம். அப்படி குறையாத செல்வம் சேர லக்ஷ்மி குபேரரை வழிபடுவது சிறப்பு.
லட்சுமி குபேர பூஜை செய்த பிறகு, லக்ஷ்மி கடாக்ஷம் எல்லாருடைய வீடுகளிலும், அனைவரின் வாழ்வில் அனைத்து தொழில்களிலும், எல்லா இடத்திலும் எல்லா நேரங்களிலும் உறுதுணையாக, பாதுகாப்பாக வழிநடத்த எங்களின் வீட்டு படி ஏறி வா லக்ஷ்மி தேவியே என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}