சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராயன் பட வெற்றிக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். இந்த இரண்டு படங்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இது தனுஷின் 52வது படமாகும். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ்சுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் நித்யாமேனன். இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருவதாகவும், அதனை தொடர்ந்து 2ம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த படம் குறித்த ஆர்வத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
இலக்குகளை அடைவதற்கான உந்துசக்தி... Motivation!
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
வெற்றி என்பது எது தெரியுமா?.. Success is when others copying you
பல் போன ரகசியம் (கலகல கதை)!
ஆணும் பெண்ணும் சமம்!
பேருந்து பயணத்தில் மறக்க முடியாத அனுபவம்!
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே!
{{comments.comment}}