ஜெயிக்கப் போவது அசுரனா இல்லை அரக்கனா?.. புதுப்பேட்டை ரெபரன்ஸுடன் கலங்கடிக்கும் ராயன் டிரெய்லர்!

Jul 17, 2024,03:10 PM IST

- அஸ்வின்


சென்னை:   ராயன் படத்தின் டிரெய்லர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. நேற்று வெளியான டிரெய்லருக்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.


நடிகர் தனுஷ் இயக்கியுள்ள 2வது படம், அவரது நடிப்பில் 50வது படம் என்று பல்வேறு சிறப்பம்சம்களுடன் கூடியதாக உருவாகியிருக்கிறது ராயன். இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது. காரணம், எஸ்.ஜே.சூர்யா படத்தில் இணைந்ததுமே அதன் எதிர்பார்ப்பு எகிறி விட்டது. சூர்யா இருந்தால் படம் வேற லெவல் என்பதுதான் இதற்குக் காரணம்.




இப்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியானது ராயன் டிரெய்லர். பார்த்ததுமே கூஸ்பம்சை கிளப்புகிறது திரைப்படத்தின் முன்னோட்டம். ஒவ்வொரு காட்சியிலும் கமர்சியல் எலிமென்ட்டையும் கமர்ஷியல் ஃபார்முலாவையும் அள்ளி  வைத்திருக்கிறார் தனுஷ். அவருக்கு கமர்சியல் படம் என்பது கைவந்த கலை. இதிலும் கமர்ஷியல் ஃபார்முலாவை அவர் நீக்கமற நிறைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. 


தனுஷ் ஏராளமான கமர்சியல் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சுள்ளான் போன்ற திரைப்படங்களை நாம் குறிப்பிடலாம். அந்த டெம்ப்ளேட்டை மாரி திரைப்படத்தில் பயன்படுத்திருப்பார். மாரி படத்தில் முதலில் இருந்து இறுதி வரையிலும் அந்த கமர்சியல் களத்தை கிரிப்பாக கையாண்டிருப்பார்.  இப்போது ராயனிலும் அந்த பார்முலா எதிரொலிக்கிறது.


முழுக்க முழுக்க வட சென்னையை மையப்படுத்திய கதை என்பது டிரெய்லரை வைத்து நம்மால் கணிக்க முடிகிறது. வடசென்னை பையனாக தனுஷ் வலம் வரும் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்களும் அசத்தியிருக்கிறார்கள் என்பதை முன்னோட்டத்தை வைத்து நாம் உணர முடிகிறது. 




இந்த  படத்தில் எஸ் ஜே சூர்யா விற்கும் தனுஷுக்கும் இடையிலான பேஸ்ஆஃப் எப்படி இருக்கும் என்பதுதான் உச்சகட்ட எதிர்பார்ப்பு. ஏன் என்றால் தனுஷ்  நடிப்பு அசுரன், எஸ் ஜே சூர்யாவோ நடிப்பு அரக்கன். இருவரும் இணைந்து நடித்திருப்பதால் டபுள் இம்பாக்ட்டாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


படத்தின் டிரெய்லரில் முக்கியமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது செல்வராகவன்தான்.. அவரது ரோல் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயனின் அதாவது தனுஷின் காட்பாதராக இப்படத்தில் அவர் நடித்திருப்பதாக தெரிகிறது. ஒரு பக்கம் காவல்துறை அதிகாரியான பிரகாஷ் ராஜ் மற்றும் வில்லன் கும்பலான சரவணன், எஸ்.ஜே.சூர்யா மற்றும் இன்னொரு பக்கம் ராயன் கேங் என்று படம் ரத்த ரணகளமாக இருக்கும் என்பைத டிரெய்லர் நிரூபிக்கிறது. பல இடங்களில் புதுப்பேட்டை ரெபரன்ஸ் தெரிகிறது. நிச்சயம் இது சூப்பர் ஹிட் படம் என்று ரசிகர்கள் இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர். படம் வரட்டும், பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்