திண்டுக்கல் : திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக தமிழகத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்., டைரி ஃபுட்ஸ் நிறுவனத்திடம் இருந்து தான் நெய் பெறப்பட்டது. அவர்களின் நெய்யில் தரம் இல்லை என திருப்பதி தேவஸ்தான இ.ஓ., ஓப்பனாக கூறி இருந்தார். இதனையடுத்து ஏ.ஆர்., டைரி நிறுவனத்தில் தமிழக உணவு தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் தங்களது 25 வருட தொழிலில் இப்படி ஒரு புகார் வந்திருப்பது இதுவே முதல் முறை. ஆனால் எங்களது தயாரிப்புகள் மிக மிக சுத்தமானவை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு நெய்யிக்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி இருந்தார். இது முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதால் திருப்பதி தேவஸ்தானமே இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதனையடுத்து தேவஸ்தான இஓ ஷியாமளா ராவ் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு தகவல்கள் அடங்கிய விளக்கம் அளித்தார்.
அதில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு தரமில்லாத நெய் பயன்படுத்தப்பட்டது உண்மை தான். அந்த நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது ஆய்வக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெய் விநியோகத்தர்களை இது குறித்து எச்சரித்த போது பலரும் தங்களின் தரத்தை உயர்த்தினார்கள். ஆனால் தமிழகத்தின் ஏ.ஆர்., டைரி நிறுவனம் மட்டும் செய்யவில்லை என்றார். ஓப்பனாக நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டே தேவஸ்தான இஓ., பேட்டி அளித்த சில நிமிடங்களிலேயே தமிழக உணவு தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் திண்டுக்கல் ஏ.ஆர்., டைரி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் தங்களது நிறுவனம் மீதான புகார் குறித்து ஏஆர் டெய்ரி நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ரெனி கூறுகையில், நாங்கள் 25 வருடமாக இந்த தொழிலில் இருக்கிறோம். இதுவரை எந்தப் புகாரும் வந்ததில்லை. இப்போது வந்திருக்கும் புகார் எங்களுக்கே புதிதாக உள்ளது. எங்களது தயாரிப்புகள் அனைத்து இடத்திலும் உள்ளன. கடைகளிலும் உள்ளன. அவற்றை தாராளமாக பரிசோதித்துப் பார்க்கலாம். மேலும் எங்களது நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு எங்கும் புகார் தரப்படவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் ராஜ் பால் என்ற பெயரில் பால் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}