மும்பை: தீபிகா படுகோன் எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்துவார். ஆனால் அவர் அணியும் பாரம்பரிய உடைகள் தனித்துவமாக இருக்கும். மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தீபிகா படுகோன் ஒரு அழகான குர்தா செட் அணிந்து அனைவரையும் கவர்ந்தார். அந்த உடை பார்க்கும்படி இருந்தது. ஆனால் செம காஸ்ட்லியான உடையாம் அது.
தீபிகா படுகோன் மற்றும் பல பிரபலங்கள் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்காக, தீபிகா படுகோன் எளிமையான காட்டன் குர்தாவைத் தேர்ந்தெடுத்தார். அது பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அதே சமயம் நவநாகரீகமாகவும் இருந்தது. ஹவுஸ் ஆப் மசாபா நிறுவனத்தின் பான் பூல் குர்தா செட்டை தீபிகா அணிந்திருந்தார். இதன் விலை சுமார் ரூ.1.5 லட்சம்.
இதனை ஷலீனா நதானி வடிவமைத்திருந்தார். இந்த மசாபா குர்தா கைத்தறியில் நெய்யப்பட்ட காட்டன் செட் ஆகும். இதில் பான் பூல் மற்றும் சன் விரிக்ஷா டிசைன்கள் உள்ளன. அதுவும் கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

இந்த உடையுடன், மெல்லிய ஆர்கன்சா துப்பட்டாவை நடிகை ஒரு தோளில் தொங்கவிட்டிருந்தார் தீபிகா. அவர் வைரத்தில் கம்மல் மட்டும் அணிந்திருந்தார். வேறு எந்த நகையும் அணியவில்லை. இதனால் அந்த உடையின் எளிமை தனித்து தெரிந்தது. தீபிகாவின் கையில் இருந்த பர்ஸ் தி பிங்க் போட்லி நிறுவனத்தைச் சேர்ந்தது. அதன் விலை ரூ.7,800. அவர் ஜியான்விடோ ரோஸ்ஸி நிறுவனத்தின் பீச் ஹனி காம்ப் மேஷ் செருப்பை அணிந்திருந்தார். அது அந்த உடைக்கு கச்சிதமாக இருந்தது.
தீபிகா படுகோனுக்கு கொண்டை அலங்காரம் மிகவும் பிடிக்கும். இந்த முறையும் அவர் தலைமுடியை ஒரு அழகான கொண்டையாக கட்டியிருந்தார். மேக்கப் மிகவும் லேசாக இருந்தது. கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப், கன்னத்தில் லேசான பிளஷ், நிறைய ஹைலைட்டர், அடர்த்தியான புருவம் மற்றும் உதடுகளுக்கு நியூட் லிப்ஸ்டிக் போட்டு இருந்தார். இது அந்த அழகிய தோற்றத்தை நிறைவு செய்தது.
தீபிகா படுகோன் எப்போதும் தனது உடை மற்றும் தோற்றத்தில் கவனம் செலுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}