சென்னை: இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் ஒரு புதுமைப் பித்தன், புதுமை விரும்பி.. எதையும் வேறு மாதிரியாகத்தான் பார்ப்பார்.. ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட அது வேற லெவலில்தான் இருக்கும். அப்படிப்பட்ட சிந்தனையாளர், படைப்பாளி பார்த்திபன்.
இப்போதும் ஒரு படைப்பை பிரசவிக்கும் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இந்த முறை சஸ்பென்ஸை கொஞ்சம் கூடுதலாகவே வைத்துள்ளார். அதுதான் பல்ஸை எகிற வைப்பதாக உள்ளது.
சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வித்தியாசமாக டிவீட் செய்திருந்தார். அதில், Good morning friends பெயரை அறிவிக்காமலே படத்தை முடித்து விட்டேன். பெயர் வரும்படியும் வரும்படி தரும்படியும்
பிள்ளைகளின்+ பெற்றோரின் மனதை தொடும்படியும் விரைவில்….. என்று கூறியிருந்தார்.
இதனால் அவர் என்ன படம் செய்யப் போகிறார்.. அது எப்படிப்பட்ட கதை என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டியது. பெற்றோர், பிள்ளைகள் என்று கூறியிருப்பதால் ஏதாவது கரன்ட் யூத் டிரன்டிங்கை வைத்து கதையைப் பின்னியிருப்பாரோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், நான் படம் (script-ல்) பார்த்த பின் தான், அதை உங்களுக்குக் காட்ட படமாக்கப் போவேன்.அப்படி படமாக்கியதை திருப்தியுடன் எடிட் செய்துக் கொண்டிருக்கிறேன். புத்தம் புதிய திரில்லராக உருவாகிறது. பார்ப்போம் விரைவில்!!!! Good night என்று கூறி விட்டுப் போயுள்ளார். இதைப் பார்த்தால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
பிள்ளைகள் + பெற்றோர்கள் + திரில்லர்.. அப்படின்னா அந்த மாதிரிக் கதையாக இருக்குமோ என்று பலரும் கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பார்த்திபன் காரு.. நீங்களே சொல்லிடுங்க.. இது எந்த மாதிரியான கதை என்பதை!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}