"தமிழரின் வீரம்.. ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு.. அரசு வேலை".. இயக்குநர் அமீர் கோரிக்கை

Jan 18, 2024,06:19 PM IST

சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி உட்பிரிவில் சேர்க்கவும், அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்  விதமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் மதுரை அவனியாபுரம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. 


குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி கோலாகலமாக  நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளும், காளையர்களும் கலந்து கொண்டனர். இதனைக் காண ஏராளமான மக்கள் வெளி ஊர்களில் இருந்தும் வந்து ஜல்லிக்கட்டு விழாவை கண்டு களித்தனர். அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.




இந்நிலையில் இயக்குனர் அமீர் உச்ச நீதிமன்றத்திடம் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழக அரசின் அரசுப்பணி இட ஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,


”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் 

புல்லாளே ஆய மகள்..”


என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.


மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.


”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்