ஹச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ இவரா? இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே

Jan 22, 2024,10:05 AM IST

சென்னை : தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் ஹச்.வினோத். சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஹச்.வினோத். இவரது படங்கள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்.


தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் இவர் கடைசியாக இயக்கிய துணிவு படம் உலக அளவில் ரூ.200 கோடியை வசூல் செய்தது. கடந்த வாரங்களாகவே ஹச்.வினேத்தின் அடுத்த படம் என்ன, இவர் அடுத்து எந்த ஹீரோவை இயக்க போகிறார் என்ற பேச்சு தான் கோலிவுட்டில் தீவிரமாக அடிபட்டு வருகிறது.




துணிவு படத்தை தொடர்ந்து ஹச்.வினோத், கமலின் KH 233 படத்தை இயக்க போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிறகு சொல்லப்பட்டது. வினோத் சொன்ன போலீஸ் கதை கமலுக்கு பிடிக்கவில்லை என்றும், கமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார் என்றும்  KH 233 படம் தள்ளி போவதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. கமல் தற்போது Thung life, கல்கி 2898 AD, இந்தியன் 2, இந்தியன் 3 என பிஸியாக இருப்பதால் இந்த படங்களை முடித்த பிறகு KH 233 படத்தின் வேலைகளை துவக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.


இதற்கிடையில் வினோத், கார்த்தியை வைத்து தீரன் 2 படத்தையும் இயக்க போகிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் கார்த்தியும் தற்போது மற்ற படங்களில் பிஸியாக இருக்கிறாராம். மற்றொரு புறம் கமலின் KH 233 படத்திற்கு அன்பறிவு தான் சண்டை காட்சிகள் அமைக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதால் வினோத், அடுத்ததாக கமலின் KH 233 ஐ தான் இயக்க போகிறார் என்றும் தகவல் பரவியது.


ஆனால் லேட்ஸ்ட் தகவலின் படி, வினோத் அடுத்ததாக இயக்க போவது கமலையோ அல்லது கார்த்தியையோ இல்லையாம். KH 233, தீரன் 2 இடங்களின் வேலைகளையும் ஒத்திவைத்து விட்டு, இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல், காமெடி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வினோத். இந்த படத்தின் ஹீரோ வேறு யாரும் அல்ல. யோகி பாபு தானாம். இந்த படத்திற்கான கதை யோகிபாபுவிற்கு பிடித்து விட்டதால் அவரும் இந்த படத்திற்காக டேட் ஒதுக்கி தருவதாக சொல்லி விட்டாராம். இந்த படத்திற்கு தான் வினோத் தற்போது திரைக்கதை அமைத்து வருகிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் ஒரு முக்கிய ரோல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்