ஜெயிலரைப் பார்த்துட்டு.. ரஜினியே மிரண்டு போய்ட்டாராமே.. நெல்சன் ஹேப்பி!

Aug 18, 2023,10:33 AM IST

சென்னை: ஜெயிலர் படத்தைப் பார்த்த பிறகு, நான் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிகமாகவே படம் சூப்பரா வந்திருக்கு என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் கடந்த ஒரு வாரமாக பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. படம் வசூலில் சாதனைகளைப் படைத்து வருவதாக ஒருபக்கம் தகவல்கள் வருகின்றன. அதேசமயம், சில விமர்சனங்களும் எழாமல் இல்லை.  விமர்சனங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் மறுபக்கம் படம் வெற்றி பெற்று விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் படம் ரூ 350 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் நெல்சன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நெல்சன் கூறுகையில்,  படத்திற்கு ஒரு சேர பாசிட்டவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.  மேலும் பாக்ஸ் ஆபீஸிலும் படம் ஹிட் ஆகியுள்ளது. வசூல் செய்து வருகிறது. 

படம் ரிலீஸாவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ரஜினி சார் பிரிவியூ பார்த்தார். படத்தைப் பார்த்து முடித்த பிறகு, தான் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு சிறப்பாக படம் வந்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பாராட்டினார். அவர் எங்கள் மீது வைத்த நம்பிக்கையினால்தான் இந்த வெற்றி சாத்தியமானது.

இந்தப் படத்தில் ரஜினி சாருக்கு நாங்கள் வைத்த குளோசப் ஷாட்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.  அவர் எங்களை எப்போது பார்த்தாலும் அவரது கண்கள் அத்தனை கூர்மையாக இருக்கும், உறுதியை வெளிப்படுத்தும்.  எனக்கு மட்டுமல்ல, கேமராமேன விஜய் கார்த்திக் கண்ணனுக்கும் கூட ரஜினி சாருக்கு குளோசப் காட்சிகள் வைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.  அவரது கண்களை அதிகம் போகஸ் செய்யலாம் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அந்த சீன்களையெல்லாம் பின்னணி இசையுடன் திரையில் பார்த்தபோது மெய் சிலிர்த்தோம்.

ரஜினி சாரை சந்தித்து நன்றி சொல்ல ஆர்வமாக இருக்கிறேன். இப்போது அவர் ஆன்மீக டூரில் இருக்கிறார். வந்ததும் முதல் ஆளாகப் போய்ப் பார்ப்பேன் நன்றி சொல்வேன் என்ற��� கூறினார் நெல்சன்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்