சென்னை: நேற்று திரையங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டார் திரைப்படம் குறித்து இயக்குனர் நெல்சன், ஸ்டார் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. இயக்குநர் இளன் சிறப்பாக எழுதியுள்ளார். கவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் இளன் இந்த படத்தை இயக்கி உள்ளார். டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிவிஎஸ்என்.பிரசாத்,ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கதலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டார் படத்திற்கு எழில் ஒளிப்பதிவும், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் நெல்சன் இன்று வெளியான ஸ்டார் திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்சன் வெளியிட்ட இணையதள பதிவில், ஸ்டார் திரைப்படம் மிகவும் நன்றாக உள்ளது. இயக்குநர் இளன் சிறப்பாக எழுதியுள்ளார். கவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரையில் பயங்கரமாக மிரட்டியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மிகவும் அற்புதமாக இசையமைத்துள்ளார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதனால் விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களை இயக்கி வரும் நெல்சன், கவினை ஓபனாக பாராட்டி உள்ளதால் அவரின் அடுத்த படத்தில் கவினுக்கு சான்ஸ் கொடுப்பாரா? கவினுக்காகவும் கதை பண்ணுவீங்களா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}