சென்னை: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று புஷ்பா 2 திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு உருவாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இப்படம் இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலில் சாதனை பெற்றது. பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி பெற்ற தெலுங்கும் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், கிளிம்ப்ஸ், பாடல்கள வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியது. புஷ்பா 2 அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகியது. இந்த டிரெயிலர் வெளியான 15 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் ட்ரெயிலரை ரிலீஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன் ரசிகர்களே தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 குறித்து இயக்குனர் ராஜமவுலி, பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}