சென்னை: உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். தியானம் பண்றதுக்கு நீங்க அவ்ளோ காஞ்சுபோயா இருக்கீங்க? தியானம்தான் இந்த உலகத்திலேயே எளிமையான விஷயம். உலகத்தில் இருக்கும் எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் நமக்குளே இருக்கிறார் என்று தான் என்று இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் பொட்டில் அடித்தாற் போல தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு. பரம்பொருள் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போன பிறவியில் செய்த பாவத்தால்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் கால் கை இல்லாமல் பிறக்கிறார்கள். நோய்களால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மகாவிஷ்ணு போன்றோர் குறித்து அதிரடியாக பேசி ஒரு வீடியோ போட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதில் அவர் கூறியிருப்பதாவது:

யாரோ ஒருத்தர் எதையோ உளறிக்கிட்டு நான் தான் ஆன்மீக குரு என்று சொன்னால் நீங்களும் பெட்ஷீட் எல்லாம் எடுத்துக்கொண்டு அவர் பேசுவதை கேட்க 100 பேராக கிளம்பிடுவீங்களா. உண்மையான குருவை நீங்கள் தேடி போக வேண்டாம். அவரே உங்களை தேடி வருவார். தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துவிட்டு வருபவர்கள் ஆன்மீக குரு கிடையாது. உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார்.
தியானம் பண்றதுக்கு நீங்க அவ்ளோ காஞ்சுபோயா இருக்கீங்க? தியானம்தான் இந்த உலகத்திலேயே எளிமையான விஷயம். உலகத்தில் இருக்கும் எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் நமக்குளே இருக்கிறார் என்று தான். உங்கள் மனசு என்ன சொல்லுதோ அதுதான். இருப்பதிலேயே எளிமையானது புத்தர் சொல்லும் வழிதான். நீங்கள் மூச்சு விடுவதை மட்டுமே கவனித்தபடி இருங்கள், வேறு எந்த சிந்தனை வந்தாலும் அதை தவிர்க்க முயற்சி செய்யாதீர்கள். இதை தொடர்ந்து செய்யும் போது தேவையில்லாத சிந்தனைகள் எல்லாம் நின்று விடும்.
காலங்கள் போகப் போக மற்ற எண்ணங்கள் எல்லாம் தன்னாலே நின்று விடும். இதை தான் புத்தர் சொல்கிறார். நீச்சல் அடிக்க அடிக்கத்தான் ஒரு நாள் நீச்சல் வரும். இதற்கு உலகத்தில் யாராவது மாற்றுக்கருத்து சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள். ஆனால் இதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது என்று கூறியுள்ளார் செல்வராகவன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}