சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா அடைந்த படுதோல்வியை கண்டு தனது ரியாக்சன் எப்படி இருந்தது என்பதை டைரக்டர் நடிகர் ஆன செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்து, கோப்பைக் கனவு தகர்ந்து போனது. இந்த போட்டியை வீட்டில் அமர்ந்து தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார் செல்வராகவன். ஆனால் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது தோல்வியை கண்டு அவர் வேதனைப்பட்டாராம்.
அப்போது தனது ரியாக்சன் எப்படி இருந்தது என்பதை செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நேற்று கிரிக்கெட்டில் தோற்றப் பிறகு அழுது கொண்ட இருந்தேன். எனது கண்ணீர் எதற்காக என்பது எனது குழந்தைகளுக்கு புரியவில்லை. பாவம் தந்தை அழுது அவர்கள் இதுவரை பார்த்ததில்லை. இது விளையாட்டில் தோற்றதற்காக வந்த கண்ணீர் அல்ல. எனது நாடு தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் வந்த கண்ணீர் என உணர்ச்சிப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகவன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தன்னுடைய கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார் தன்னுடைய படங்கள் பற்றிய அப்டேட்டுகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். கிரிக்கெட் பைனலில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோவதை , ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பலரும் உணர்ந்து விட்டனர். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கூட டிவியை ஆப் செய்துவிட்டனர். இருந்தாலும் விடாப்பிடியாக முழு நம்பிக்கையுடன் கடைசி வரை கிரிக்கெட் பார்த்தவர்களில் செல்வராகவனும் ஒருவர் போல.
அதனால்தான் இப்படி ஒரு ட்ரீட் போட்டுருக்காரு. கிரிக்கெட் விளையாடியதற்கு தாங்கள் உயிரை கொடுத்து விளையாடியதற்காக தோல்வியடைந்ததற்கு நேற்று மைதானத்திலேயே இந்திய வீரர் முகம்மது சிராஜ் அழுதார். இதை நேரில் காண சென்ற ரசிகர்கள் பலரும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். இருந்தாலும் மற்றவர்கள் சரிதான் விடுப்பா விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்கள் ஆனால் செல்வராகவும் தான் வீட்டில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் போலும்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
{{comments.comment}}