சென்னை: தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு தருவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வித்தியாசமான கதையுடன் உருவாகும் படம்தான் கோட். படம் குறித்து மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்படத்தை உருவாக்குவதால் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

படம் குறித்த அறிவிப்பு வந்தபோதே பர்ஸ்ட் லுக், 2வது லுக், 3வது லுக் வரை பட்டையைக் கிளப்பினார்கள். அதுவே பயங்கர ஆர்வத்தைத் தூண்டி விட்டது. அதன் பிறகு பிரஷாந்த், பிரபு தேவா பிறந்த நாட்களின்போது அவர்கள் சம்பந்தப்பட்ட ஸ்டில்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் மெகா அப்டேட் ஒன்று வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியானது.

இன்று ரம்ஜான் என்பதாலும், படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமைத் தழுவியவர் என்பதாலும் அவருக்காக ஒரு பாடலை வெளியிடப் போகிறார்களா அல்லது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கப் போகிறார்களா என்று ரசிகர்கள் தாறுமாறான ஊகத்தில் இறங்கியிருந்தனர். ஆனால் தற்போது ரசிகர்களை எகிற வைக்கும் வகையில் படத்தின் ரிலீஸ் தேதியையே அறிவித்து விட்டனர். செப்டம்பர் 5ம் தேதி படம் திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்துள்ளது.
சூப்பரான புதிய லுக்குடன் விஜய் காணப்படும் ஸ்டில்லை வெளியிட்டு பட ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். ரசிகர்கள் ஒட்டுமொத்த மகிழ்ச்சியுடன், செப்டம்பரைக் கொண்டாட இப்போதே ஆரம்பித்து விட்டனர்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}