ஜூன் 9 பிரேம்ஜிக்கு கல்யாணம்..இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்க.. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு!

Jun 05, 2024,02:27 PM IST

சென்னை: நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான, நடிகர் பிரேம்ஜியின் திருமணம் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற இருப்பதால் எங்களுடைய பிரைவசியை மதித்து, இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்தி அதை வைரலாக்குமாறு அவரது அண்ணனும், இயக்குனருமான வெங்கட் பிரபு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பிதான் நடிகர் பிரேம்ஜி. இசையில் ஆர்வமுள்ள, பிரேம்ஜி  தனது திரை வாழ்க்கையை நடிகராக ஆரம்பித்து அப்படியே பின்னனிப் பாடகராக, இசையமைப்பாளராக என்று போய்க் கொண்டிருக்கிறார். 

பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ராப் பாடல்களில் பாடியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த வல்லவன் திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். அண்ணன் வெங்கட் பிரபுவின்  சென்னை 600028  என்ற படம் மூலம் அறிமுகமானார். இப்படம் கோடை விடுமுறையில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதிலும் பிரேம்ஜியின் நகைச்சுவை நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இவர் பேசிய என்ன கொடுமை சார் இது என்ற டயலாக் மிகவும் பிரபலமானது. 




இந்த வசனம் தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது. இதன் பின்னர் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வர நிறைய வாய்ப்பு வரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா, சென்னை 600028 -2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். பிசியான நடிகராக இருந்தும், பிரபலமானவராக இருந்தும் கூட இன்னும் ஏன் கல்யாணம் ஆகவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்தது. 


இந்த நிலையில்தான் சமீபத்தில் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இது உண்மையா, பொய்யா என்ற குழப்பமும் கூடவே உலா வந்தது. இதை தற்போது வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும் அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!


எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலி கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்ப யார் வச்சிருக்கா..? இதை எல்லாவற்றையும் விட பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ..? என்று உங்கள் கேள்விக்கு பதில் வரும் ஒன்பதாம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம் .


இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாண பத்திரிக்கை வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம் என வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்