சென்னை: ஏ.ஜி.எஸ்க்கும் தளபதிக்கும் நன்றி. அவராலதான் எல்லாம் நடந்தது. நாங்க ஒரு வருஷத்துல இந்தப் படத்தை எடுத்தோம். ஹாலிவுட்ல எல்லாம் இந்தப் படத்தைப் பண்ண சில வருஷங்கள் ஆகும். நம்ம பட்ஜெட்ல, நம்ம படமா பண்ணதுக்கு ராஜமெளலி சார்தான் இன்ஸ்பிரேஷன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற தி கோட் படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கான டிக்கெட் பதிவும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்துள்ளது. விஜய் ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் டிக்கெட்டுகளை வாங்கி முடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்த புதுபுது தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதன்படி இந்த திரைப்படத்துக்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய வெங்கட்பிரபு, தியேட்டர்ல கண்டிப்பா எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்க. தளபதியை புதுசா பார்க்க முடியும். நாங்களே பேசுறதால, இத திரும்பத் திரும்பச் சொல்கிறோம். இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும்... புது வழியில் கதை சொல்லி இருக்கிறோம். ஆனால் நீங்க வந்து பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு.
எனக்கு நிறைய நட்சத்திரங்களோட வேலை செஞ்சது நிறைவான அனுபவம். விஜய் சார், பிரசாந்த் சார், பிரபுதேவா சார், மோகன் சார், ஜெயராம் சார், சினேகா மேடம், லைலா மேடம், மீனாட்சி, வைபவ், பிரேம் ஜி, எல்லோரும் எனக்கு வேலையை ஈஸியா ஆக்குனாங்க. ஏஜிஎஸ் கூட எனக்கு இது முதல் படம். நாங்க மூணு நாலு வருஷமா சேர்ந்து வேலை செய்றத பத்தி பேசிகிட்டு இருந்தோம். அது இப்ப நடந்திருக்கு. அதுவும் அவங்க 25வது படத்துல, தளபதி படத்துல. ஏஜிஎஸ், தளபதிக்கும் நன்றி. அவராலதான் எல்லாம் நடந்தது.
நம்ம பட்ஜெட்ல, நம்ம படமா பண்ணதுக்கு ராஜமெளலி சார்தான் இன்ஸ்பிரேஷன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}