சென்னை: நடிகர் விஜய்யின் லியோ பட வெளியீட்டின்போது நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
லியோ படத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடையே வரலாறு காணாத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு படம் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளன.

அரசுத் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசிக் காட்சி முடிய வேண்டும். அரசு அறிவித்த டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பார்க்கிங் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
விதி மீறல்கள் இருந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அதிகாரிகள் இப்போதே நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவித்து வருகின்றனர். புகார்கள் இருந்தால் இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தரலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கோட்டம் வாரியாக தொலைபேசி எண்களை ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}