சென்னை: தீபாவளியை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது அரசு அலுவலகங்கள், ஆகியவற்றிற்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக இன்றிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தின நாள் அரசு விடுமுறை என மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் வரை மட்டுமே செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}