- மஞ்சுளா தேவி
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் ஆடு விற்பனை களை கட்ட ஆரம்பித்துள்ளது . பல கோடி அளவுக்கு அனைத்து ஆட்டு சந்தைகளிலும் ஆடுகள் விற்பனையாகிக் கொண்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு ஆட்டு சந்தைகளில் மட்டும் ஒரே நாளில் ரூ. 21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாட உள்ளது. தீபாவளியன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து தலைகுளித்து ("கங்கா ஸ்னானம்"), புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்வோம். அதுவும் குறிப்பாக கறிசோறு இல்லாமல் எப்படி..!.. தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரமும், கறிவிருந்தும் தான்.
"கறிச் சோறு முக்கியம்ண்ணே".. என்பது போல அம்மாவின் கை பக்குவத்தில் ருசிக்க கறி குழம்பு, சிக்கன் ஃப்ரை, மட்டன் சுக்கா, பிரியாணி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். தீபாவளி அன்று காலை முதல் இரவு வரை கறி விருந்து தான்.. வீடுகள் தோறும் கறி மணம் கமகமவென தெருவே மணக்கும். அது மட்டுமா விதம் விதமான ஸ்வீட்டுகளும் , முறுக்கு வகையறாக்களும் களை கட்டும்.
அதிகாலை முதலே கறிக்கடையில் கூட்டம் அலைமோத ஆரம்பிக்கும். ஆடு மற்றும் கோழிக்கறி விற்பனை அனல் பறக்கும். இந்த வருடமும் ஆடு விற்பனை அமோகமாக களைகட்ட ஆரம்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அயலூரில் ஒவ்வொரு வாரமும் வியாழனன்று எப்போதுமே ஆடு மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெறும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய சந்தையாகும். இதில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் அதிக அளவில் கலந்து கொண்டு ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 4 பெரிய ஆட்டுச் சந்தைகள் உள்ளன.. இங்கு ஒரே நாளில் ரூ. 21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளனவாம்.
தென் மாவட்டமான மதுரை மாவட்டம், திருமங்கலத்திலும் மிகப்பெரிய ஆட்டுச் சந்தை உள்ளது .இங்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். இங்கு 8000 முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்வது வழக்கம்.
அதேபோல கடலூர் மாவட்டம் வேப்பம்பூர் ஆட்டு சந்தையில் ஆடு விற்பனை ஜோராக நடைபெற ஆரம்பித்துள்ளது. இங்கு ஒரே நாளில் ரூ. 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கிருஷ்ணகிரியில் நடந்த ஆட்டுச் சந்தையிலும் ரூ. 7 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
திண்டுக்கல், கடலூர், மதுரை ,கோவை போன்ற முக்கிய மாவட்டங்களில் சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. இங்கு நாட்டு ஆடு, செம்மறி ஆடு, வெள்ளாடு, கிடாய் போன்ற வகையான ஆடுகள் உள்ளன. இந்த சிறப்பு ஆடுச் சந்தையில் இன்று அதிகாலை 4 மணி முதல் விற்பனை தொடங்கியது. இதில் உள்ளூர் ஆடுகளை தவிர வெளி மாநில ஆடுகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 5000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ஒரு ஆட்டின் விலை ரூபாய் ஆயிரம் முதல் 3000 வரை அதிகரித்துள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}