- மீனா
சென்னை: தீபாவளி வந்தாச்சு.. புது டிரஸ்ஸு எடுக்க கடைகளில் கூட்டம் அலைமோதுது.. இந்த வாட்டி பட்டாசை எப்படித் தூக்கிப் போட்டு வெடிக்கலாம்னு பிள்ளைங்க பிளான் போட்டுட்டிருக்கு.. மறுபக்கம் "கிச்சன் மகாராணிகள்".. இந்த வாட்டி இதைப் பண்ணி அசத்தலாமா.. அதைப் பண்ணி திகைக்க வைக்கலாமா என்று "திகிலூட்டும்" பிளான்களில் மும்முரமாக உள்ளனர்.
இருங்கங்க.. எங்களுக்கும் பதட்டமாத்தான் இருக்கு.. இருந்தாலும்.. "இதுவும் கடந்து போய்ரும்"னு மனசைத் தேத்திக்கிட்டு.. இந்த ஜோக்ஸைப் படிச்சு ஆறுதல் பட்டுக்கங்க..!
என் கையால செஞ்சு தர்றேன்னு சொன்னேன்!

மனைவி: பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போறாங்களாம்.
கணவன்: எல்லாருமா?
மனைவி: அட ஆமாங்க. நான் என்ன பொய்யா சொல்றேன்.
கணவன்: தீபாவளிக்கு பலகாரம் தரேன்னு சொன்னியா?
மனைவி: ஆமாங்க .நானே என் கையால செஞ்சு கொண்டு வந்து தரோன்னு சொன்னேன்.
கணவன்: அப்புறம் எப்படி வீட்ல இருப்பாங்க.
மனைவி :😡😡
--
அதுக்குத்தாங்க ஜீராவோட சாப்பிடச் சொன்னேன்!

கணவன்: தீபாவளிக்கு நீ செஞ்ச இனிப்பு சீடை ரொம்ப நல்லா இருக்குமா .
மனைவி: போங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு விளையாட்டு தான்
கணவன்: நான் என்ன விளையாடினேன்
மனைவி: நான் தீபாவளிக்கு செஞ்சது குலோப் ஜாமுன் அதை சீடைனு சொல்றீங்க.
கணவன்: என்னாது.. குலோப் ஜாமுனா!
மனைவி: அதுக்குதான் ஜீராவோட சேர்த்து சாப்பிடுங்கன்னு சொன்னேன். நீங்க கேட்காதது என் குத்தமா.
கணவன்: நீ சொன்னது அப்ப புரியல. இப்ப புரியுது எதுக்குன்னு.
--

நபர் 1: தீபாவளிக்கு புதுசா ஒரு வெடி வந்து இருக்காம்.
நபர் 2: அப்படியா என்ன ஸ்பெஷல்.
நபர் 1: யாரும் பத்த வைக்கணும்னு அவசியமே இல்லையாம்.
நபர் 2: அப்படியா !அப்புறம் எப்படி வெடிக்கும்.
நபர் 1: வீட்ல இருந்தாலே வெடிச்சுக்கிட்டே இருக்குமாம்.
நபர் 2: வெடி பேரு?
நபர் 1: மாமியார் மருமகள் வெடியாம்.😂😂😂
--

நண்பன் 1: என்னடா தீபாவளிக்கு புது டிரஸ் எல்லாம் எடுத்துட்டியா
நண்பன் 2: அதுக்கு தாண்டா உன்கிட்ட வந்து இருக்கேன்.
நண்பன் 1: என்கிட்டயா எதுக்குடா?
நண்பன் 2: இல்ல டிரஸ் எடுக்க பணம் பத்தல. ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தா கொடு .நான் அடுத்த மாசம் திருப்பி கொடுத்துடுறேன்.
நண்பன்1: எனக்கும் செலவு அதிகம் . கையில "சுத்தமா" பணம் இல்லைடா.
நண்பன் 2: சுத்தமா இல்லாட்டியும் பரவாயில்லைடா.. நான் கிளீன் பண்ணிக்கிறேன்!
நண்பன் 1:😳😳
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}