- மீனா
சென்னை: அடுத்த வாரம் தீபாவளிங்க.. துணிமணியெல்லாம் எடுத்து முடிச்சா்சசா.. அப்புறம் இந்த வாட்டி என்ன பலகாரம் பண்ணப் போறீங்க.. எது பண்ணாலும் பல்லுக்கு பாதகமில்லாம இருக்கிற மாதிரி பண்ண வேண்டியது முக்கியம் பாஸ்.. அதை மட்டும் மனசுல வச்சுக்கங்க.
சரி வாங்க.. சாயந்திரத்தை ஜாலியாக என்ஜாய் பண்ண சில தீபாவளி ஜோக்ஸைப் பார்த்துட்டு இந்த நாளை கலகலன்னு முடிப்போம்.
அதுபோதுமே பிரஷர் ஏற!
டாக்டர்: என்னம்மா, இவருக்கு பிரஷர் இவ்வளவு அதிகமா இருக்கு.
மனைவி: ஐய்யோ அப்படியா டாக்டர்.
டாக்டர்: பிரஷர் இவ்வளவு அதிகமாகுற அளவுக்கு நீங்க அப்படி என்ன செஞ்சீங்க.
மனைவி: டாக்டர் நான் எதுவும் செய்யல. தீபாவளிக்கு பர்ச்சேஸ் தான் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
டாக்டர்: அது போதுமே உங்க கணவரோட பிரஷர் அதிகமாகறதுக்கு.
மனைவி:😳😳
--
இல்லத்தரசிகள் பாத்துக்குவாங்க சித்திரகுப்தா
சித்திரகுப்தா: பிரபு நமக்கு மட்டும் ஓய்வு இல்லாமல் எப்பொழுதும் வேலை இருந்து கொண்டே இருக்கிறதே .
எமதர்மன்: அதுக்கு.
சித்திரகுப்தா: நமக்கும் ஓய்வு வேண்டும் பிரபு.
எமதர்மன்: கவலைப்படாதே சித்திரகுப்தா தீபாவளி வருகிறது அல்லவா, நமக்கும் ஓய்வு கிடைக்கும்.
சித்திரகுப்தா: எப்படி பிரபு.
எமதர்மன்: இல்லத்தரசிகள் சமையல் வீடியோக்களை பார்த்து சமைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நம் வேலையையும் சேர்த்து அவர்களே பார்த்துக் கொள்வார்கள் .நமக்கு ஓய்வு கிடைக்கும் தானே.
-
யாருங்க இது.. !
பெண்: டாக்டர் இவர் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு.
டாக்டர்: ஏம்மா இவருக்கு சுகர் ,பிரஷர் இப்படி ஏதாவது இருக்குதா?
பெண்: அது எனக்கு எப்படி தெரியும் டாக்டர்.
டாக்டர்: இவர் உங்க கணவர் தானே.
பெண்: ஐயோ டாக்டர் இவர் என் கணவர் இல்லை.
டாக்டர்: அப்புறம் யார் இவரு.
பெண்: தீபாவளிக்கு டிரஸ் எடுக்கிறதுக்கு போனப்ப இவர்தான் எல்லா சேலையும் எனக்கு எடுத்து காமிச்ச சேல்ஸ்மேன் .
டாக்டர்:😲😲
--
இதெல்லாம் வாங்க கடன் வாங்கப் போறேன்
மகன்: அப்பா தீபாவளிக்கு கலர் கலரா நிறைய பட்டாசு வாங்கணும்.
அம்மா: அப்பா அதெல்லாம் வாங்கிடுவார் மகனே. ஏங்க அப்படியே எனக்கும் புடவை, நகையெல்லாம் வாங்கணும். நீங்க என்ன வாங்க போறீங்க
கணவன்: இதெல்லாம் வாங்குறதுக்கு.. நான் நிறைய கடன்.. வாங்க போறேன்.
மனைவி:😳😳
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}