சென்னை: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென விம்மி விம்மி குழந்தை போல அழவே கூட்டத்தினர் பெரும் சோகமாகி விட்டனர்.
ஆனால் பிரேமலதா உடைந்து போய் அழுததற்குப் பின்னாடி ஒரு பிளாஷ் பேக் இருக்கு.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார். அப்போது விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன்தான் முதல் முறையாக விஜயகாந்த் கூட்டணி அமைத்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக அவர் இந்த ஆண்டுதான் கூட்டணி அரசியலில் நுழைந்தார். இந்தத் தேர்தலில் தேமுதிக அதிக தொகுதிகளை பெற்ற 2வது கட்சியாக உயர்ந்தது. அதாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்தது, திமுக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவுக்கு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கானல் நீராகி விட்டது. இதுவரை வெற்றி பெறவே முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த ரிஷிவந்தியம் தொகுதி தேமுதிகவுக்கு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோதுதான் பழைய நினைவுகள் வந்து கண்ணீர் விட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். அவர் பேசும்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். எங்கு சென்றாலும் இதுபோல உண்மையான தொண்டர்களை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் விஜயகாந்த் வாழ்ந்த இந்த தொகுதியை என்னால் மறக்க முடியாது என்று கூறி அழுதார்.
மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுத காட்சியை தொண்டர்களும் உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}