"பாஜக வேண்டாம்.. சரிப்பட்டு வராது".. ஒரே குரலில் முழங்கிய தேமுதிக.. "இந்தக் கட்சி"ன்னா ஓகேவாம்!

Feb 17, 2024,04:16 PM IST

சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்க தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.  இதற்கு முன்னதாக தங்கள் கூட்டணி கட்சியோடு முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் மற்ற பிரதான கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இதனை அடுத்து  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது.




ஆனால், அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாத நிலையே உள்ளது.  14 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கொடுத்தால் கூட்டணி என அறிவித்திருந்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. ஆனால் திடீர் என தாம் அப்படி சொல்லவே இல்லை எனவும் பல்டி அடித்தார் பிரேமலதா. இருப்பினும் அதிமுக மற்றும் பாஜக தங்களால் இத்தனை தொகுதி தரமுடியாது என மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தேமுதிக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது.


இந்நிலையில்,தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என அக்காட்சி மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். சீட் விவகாரத்தில் பிடிவாதம் காட்டாமல் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


அதிமுக கூட்டணியை மா.செக்கள் வலியுறுத்த சில முக்கியக் காரணங்கள் உள்ளன.  அதிமுகவில் கூட்டணி சேர்ந்த பிறகுதான் தேமுதிகவுக்கு அரசியல் ரீதியாக மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு பிரிந்து வந்த பிறகு பெரும் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறோம். மேலும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் 2026 சட்டசபை தேர்தலையும் கருத்தில் கொள்ள  வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


சட்டசபைத் தேர்தலுக்கு  நமக்கு அதிமுக தான் பொருத்தமாக இருக்கும்.  எனவே அதையும் மனதில் வைத்து இப்போதே அதிமுகவுடன் இணக்கமாக செயல்பட்டால், நிச்சயம், சட்டசபைத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற அதிமுகவினர் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அவர்கள்  தொடர்ந்து கூறி வருகின்றனர்.


இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் என்ன செய்ய போகிறார். மா.செ.க்கள் பேச்சுக்கு இடம் அளிப்பாரா?... அல்லது சீட்டு விவகாரத்தில் பிடிவாதம் காட்டுவாரா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்