தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை.. மியாட் மருத்துவமனை அறிக்கை

Nov 29, 2023,05:48 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் நிலை சீராக இல்லை என்று சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2 வாரங்களுக்கு முன்பு இரவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தேமுதிக கட்சி தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக ஒரு செய்தி வெளியானது. அதையும் தேமுதிக மறுத்தது. இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு சிகிச்சை நல்லபடியாக நடப்பதாகவும், அவர் சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.




இந்தப் பின்னணியில் தற்போது புதிதாக ஒரு மருத்துவ நிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் அவர் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ப்ரீத்தி மோகன்தாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது விஜயகாந்த்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக உணர முடிகிறது. விஜயகாந்த் குறித்த இந்த அறிக்கை அவரது தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்ற பிரார்த்தனையில் விஜயகாந்த் தொண்டர்கள் இறங்கியுள்ளனர்.


சீக்கிரமே உடல் நலம் சரியாகி.. ஜம்முன்னு வாங்க கேப்டன்!

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்