திமுக - காங் போட்ட சதித் திட்டமே காவிரி விவகாரம் .. நாராயணன் திருப்பதி!

Sep 30, 2023,01:16 PM IST

சென்னை: அதிகாரத்திற்கு வருவதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம் என்கிறார் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.


கர்நாடக மக்களை மொழி ரீதியாக, மாநில உணர்வுகளை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துகிறது. மாநில அரசை கலைக்க முடியுமா என சவால் விடுகிறது காங்கிரஸ். அதற்கு துணை நிற்கிறது தி மு க என்றும் கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: 




"தண்ணீர் தரக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு; தண்ணீர் திறக்காவிட்டால், நீர்தேக்கங்களை மத்திய அரசால் கைப்பற்ற முடியுமா? நீதிமன்ற அவமதிப்பாக அதை கருத முடியுமா? அரசாங்கத்தையே இதனால் கலைக்க முடியுமா? என்ற கோணத்தில் ஆலோசனை நடைபெறும்" என்று கூறியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.


சட்டம் தெரியாது பேசுகிறாரா? அல்லது சட்டம் தெரிந்தே வேண்டுமென்றே மத்திய அரசை வம்புக்கிழுக்க வேண்டி பேசுகிறாரா கர்நாடக முதல்வர்? மலிவான மொழி அரசியல் செய்து கேடுகெட்ட நிர்வாகத்தை நடத்துகிறது காங்கிரஸ் அரசு. 


காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிகளின் படி, நீர்ப்பிடிப்பு, பங்கீடு, ஒழுங்குமுறைப்படுத்துதல், காவேரி நீரை கட்டுப்படுத்துதல் ஆகியவைகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்கள் என்று உச்சநீதி மன்றம் தெளிவாக தனது தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ளது. 


மேலும், அணைகளின் பராமரிப்பை மேற்பார்வையிடுதல், ஒழுங்காற்று குழுவின் மூலமாக நீரை திறந்து விடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு முழு பொறுப்பும் இந்த ஆணையமே என்று தெளிவாக உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது.


கேரளாவில் உள்ள பனசுராசகர், கர்நாடகாவில் உள்ள  ஹேமாவதி, ஹாரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகரா  நீர்த்தேக்கங்கள், தமிழகத்தில் உள்ள கீழ் பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேற்பார்வையில் அந்தந்த மாநிலங்களால் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். 




இந்த ஆணையமானது, ஒவ்வொரு மாநிலத்திலும் விளையும் பயிர்களின் குறிப்பு, விவசாய நிலப்பரப்பு முறைகள் குறித்த விவரங்கள் மற்றும் குடிநீர் மற்றும் தொழிற்துறை தொடர்பான நீர் உபயோகம் குறித்த ஒவ்வொரு மாநிலத்தின் விவரங்களையும் கணக்கிட்டு மேற்பார்வையிட வேண்டும். 


இந்த ஆணையத்தில் மத்திய அரசு, தமிழகம், கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து அரசுகளும்  நியமிப்பவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்சொன்னவை உட்பட, பல்வேறு நிபந்தனைகளுடன் நான்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வல்லுநர்கள் பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதி மன்றம்.  


இவ்வளவு இருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் உண்மைக்கு புறம்பான தகவல்களை, தரவுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசே பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களில் பாஜக அரசு கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த போது, உண்மையை சொல்லி அந்தந்த சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இரு மாநிலங்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் எழாத சூழ்நிலையில், இப்போது மட்டும் மத்திய அரசுக்கு எதிராக பேசி, மொழி ரீதியாக, மாநில ரீதியாக காங்கிரஸ் அரசு பதட்டத்தை உருவாக்குவது முறையல்ல. 


நீர் தேக்கங்களை மத்திய அரசு கைப்பற்ற முடியுமா? என்ற கேள்விக்கு, சட்டப்படி, அந்த நீர்தேக்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டே தான் மலிவான அரசியலை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியுமா என்றால், ஆம், இது நீதி மன்ற அவமதிப்பு தான் என்பதே பதில். அரசாங்கத்தையே இதனால் கலைக்க முடியுமா? என்ற கேள்விக்கு, ஒரே பதில்,


பாராளுமன்ற தேர்தல் வரும் வேளையில், கர்நாடக மக்களை மொழி ரீதியாக, மாநில உணர்வுகளை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து அதன் மூலம் அகில இந்திய அளவில் பதட்டத்தை தூண்ட முயற்சித்து, சட்ட ஒழுங்கை காரணம் காட்டி மாநில அரசை கலைக்க முடியுமா என சவால் விடுகிறது காங்கிரஸ். அதற்கு துணை நிற்கிறது திமுக. அதிகாரத்திற்கு வருவதற்காக, தி மு க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்