மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் 7 மாநிலங்களை ஒருங்கிணைக்க திமுக முடிவு!

Mar 09, 2025,10:05 PM IST
சென்னை: தொகுதி மறு சீரமைப்பினால் தொகுதிகளை இழக்கப் போகும் மாநிலங்களின் கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான முறையில் குரல் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று காலை நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது தொடர் திங்கள்கிழமையான நாளை தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் தீர்மானம்

தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் கழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.



2வது தீர்மானம்

தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

3வது தீர்மானம்

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துள்ள

தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் புதிய அணி

கிட்டத்தட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிஷா, பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்த தேசிய அளவில் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் வலுவான முறையில் தனது போராட்டத்தை முன்வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தேசிய அளவில் ஒரு புதிய அணியாகவும் மாறும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியும் என திமுக தலைமை நம்புகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Metro: மெட்ரோ கார்டிற்கு இன்றுடன் டாட்டா.. சிங்காரச் சென்னை அட்டைக்கு வெல்கம்!

news

சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!

news

எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?

news

6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!

news

கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?

news

10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!

news

முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு

news

பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!

news

யுபிஐ-யில் யாருக்காவது பணம் அனுப்பப் போறீங்களா.. முதல்ல இதைப் படிச்சுட்டுப் proceed பண்ணுங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்