திமுக வேட்பாளர் பட்டியலில்.. "ஷாக்கிங் மிஸ்ஸிங்".. தர்மபுரி டாக்டர் செந்தில்குமார்!

Mar 20, 2024,06:31 PM IST

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. இதில் தற்போதைய எம்.பிக்களில் 10 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 11 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.


திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் முக்கியமான 10 வேட்பாளர்கள் ஏற்கனவே எம்.பிக்களாக இருப்பவர்கள்தான். 11 பேர் புதுமுகங்கள் ஆவர். அதிக அளவிலான புதுமுகங்களுக்கு சீட் கொடுத்து எதிர்க் கட்சிகளை அதிர வைத்துள்ளது திமுக. இது தற்போதைய எம்.பிக்களுக்கு எதிரான தொகுதி மனப்பான்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருதப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை 3 தொகுதிகளிலும் பழையவர்களே போட்டியிடுகிறார்கள். அதில் மாற்றம் இல்லை. தருமபுரி தொகுதி எம்.பியாக இருந்து வந்த டாக்டர்   செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. புதியவராக மணி நிறுத்தப்பட்டுள்ளார். செந்தில் குமார் ஆரம்பத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார். அப்போது சில சர்ச்சைகளும் ஏற்பட்டன. இதனால் தொகுதியிலும் அதிருப்தி நிலவியதாக பீட்பேக் கிடைத்ததால் அவருக்கு சீட் தரப்படவில்லை.



பெரம்பலூரில் இந்த முறை திமுக நேரடியாக போட்டியிடுவதால் கே.என். நேருவின் மகன் அருண் நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல கள்ளக்குறிச்சி, தேனி, சேலம், ஈரோடு ஆகிய தொகுதிகளிலும் புதுமுகங்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் எதிர்பார்த்தார் போல தேனியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு சீட் கொடுத்துள்ளது திமுக.

பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல ஆரணி, கோவையிலும் புதுமுகங்களே களம் காண்கின்றனர். அதிக அளவிலான புதுமுகங்கள் நிறுத்தப்பட்டிருப்பது திமுகவின் தைரியம் + நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.


திமுகவில் சீட் மறுக்கப்பட்டவர்கள்:  தர்மபுரி - டாக்டர் செந்தில் குமார், சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன், தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தென்காசி (தனி) - தனுஷ் குமார், கள்ளக்குறிச்சி - கெளதம  சிகாமணி, 


கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி போனதால் வாய்ப்பிழந்தவர்கள்: திண்டுக்கல் - வேலுச்சாமி, கடலூர் - டி.ஆர்.விஸ். ரமேஷ், மயிலாடுதுறை - எஸ். ராமலிங்கம், திருநெல்வேலி - ஞானதிரவியம்


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்