DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

Jun 12, 2026,05:17 PM IST

சென்னை: நடந்து முடிந்த தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட திமுக களஆய்வுக் குழுவின் அறிக்கையில், அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கை தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிந்து நின்ற அரசு மற்றும் கட்சி:




தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த களஆய்வுக் குழு அறிக்கையில், "களத்தில் திமுக அரசு ஒருபுறமும், திமுக கட்சி மற்றொருபுறமும் என இரண்டாகப் பிரிந்து நின்றதே தோல்விக்கு முக்கியக் காரணம்" என்று மிக வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்திற்கும், கட்சியின் உள்ளூர் கட்டமைப்புக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், வாக்காளர்களை முழுமையாகச் சென்றடைந்து அவர்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது என்று களஆய்வில் தெரியவந்துள்ளது.


அமைச்சர் சேகர்பாபு மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

இந்த அறிக்கையில் குறிப்பாக, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது கட்சியின் நிர்வாகிகள் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களின் நிர்வாகக் குழுக்கள் மற்றும் பொறுப்புகளில், கட்சியின் சீனியர் அல்லது உழைத்த நிர்வாகிகளுக்கு முன்னுரிமை தராமல், அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமானவர்களுக்கும் அவருக்கு வேண்டியவர்களுக்கும் மட்டுமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால், கட்சியின் நீண்டகால விசுவாசிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்ததாகவும், இது தேர்தல் பணியில் தொய்வை ஏற்படுத்தி வாக்காளர்களைத் திரட்டுவதில் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நிர்வாகிகளின் அடுக்கடுக்கான புகார்கள்:

தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்த குழுவினரிடம், மாவட்ட மற்றும் பகுதி அளவிலான திமுக நிர்வாகிகள் தங்களது குமுறல்களை அடுக்கடுக்கான புகார்களாகப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர்களின் தன்னிச்சையான போக்கு, தொண்டர்களை மதிக்காமை மற்றும் உள்கட்சிப் பூசல்களே தங்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த அதிரடித் திருப்பங்கள் அடங்கிய களஆய்வுக் குழுவின் அறிக்கை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்றுள்ள நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பைச் சீரமைக்கவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் கட்சியில் அதிரடி மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்