சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயற் திட்ட குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக கட்சி கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் விஜயின் பேச்சு மற்றும் கட்சிக் கொள்கை குறித்து தற்போது வரை பல்வேறு அதிர்வலைகள் எழுந்து வருகின்றன.
மறுபக்கம் விஜய் கடுமையாக எதிர்க்கும் திமுக, தனது தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்து விட்டது. திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக குழுவையும் திமுக அதிரடியாக அமைத்து வேலைகளைத் தொடங்கி விட்டது.

இப்படி சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை வருட ஆண்டு காலம் இருந்தும் கூட தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயற்குழு திட்ட குழு கூட்டம் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணி அளவில் தொடங்குகிறது. கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்ப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரை உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு இந்தக் குழு. இக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதுதான் பின்னர் அமல்படுத்தப்படும். அந்த வகையில் இந்தக் கூட்டம் கூடுவது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பாகவும், இன்ன பிற முக்கிய முடிவுகள் தொடர்பாகவும் இதில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}