சென்னை : தமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபா இடங்கள் இந்த மாதத்துடன் காலியாக உள்ளன. இதற்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக, திமுக இரு கூட்டணிகளிலும் இதுவரை தொகுதி பங்கீடோ, கூட்டணி பேச்சுவார்த்தையோ முழுமை பெறாமல் உள்ளது. பல கட்சிகளின் முக்கிய நிபந்தனையே ராஜ்யசபா சீட்டாக தான் உள்ளது. இதனால் தற்போது வெளியாகி உள்ள ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு, இரு தரப்பிலும் கூட்டணியை ஒழுங்குபடுத்த உதவும் யுக்தியாக பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களில் 4 திமுக.,விற்கானது. ஏற்கனவே திமுக சார்பில் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் பெரிய பிரச்சனையே, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு; அமைச்சரவையில் இடம் வேண்டும். உள்ளாட்சி இடங்களில் 30 சதவீதம் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸ் தரப்பில் வலுவாக எடுத்து வைக்கப்படும் நிபந்தனையாக உள்ளது. ஆனால் திமுக.,வை பொருத்த வரை இதுவரை மாநில அரசியலில் கூட்டாட்சியில் பங்கு அளித்தது கிடையாது. இதை தான் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் திமுக.,வுடன் கூட்டணி பேச துவங்கும் போது தமிழக சட்டசபை தேர்தலில் 50 சீட்கள் வரை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் கேட்கப்பட்டதாம். ஆனால் ஆரம்பம் முதலே 25 முதல் 28 சீட்கள், 2 ராஜ்யசபா சீட் என்பதை தான் திமுக தலைமை சொல்லி வருகிறது. இது சரியாக வராது. கூட்டணியை உடைத்துக் கொண்டு தவெக பக்கம் போய் விடலாம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கூறி உள்ளனர். ஆனால் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தலையிட்டு, வேண்டாம் என தடுத்ததால் தான் காங்கிரஸ்-தவெக கூட்டணி கடைசி நிமிடத்தில் முடிவாகாமல் போனதாக சொல்லப்படுகிறது. கூட்டணி உடையாமல் திமுக, காங்கிரஸ் இரு தரப்பிலும் பேசியதுடன், தனக்கான ராஜ்யசபா சீட்டை கன்ஃபார்ம் செய்து கொண்டாராம் ப.சிதம்பரம்.
அதே போல் மற்றொரு காங்கிரஸ் முக்கிய புள்ளியும் திமுக தலைமையிடம் பேசி தனக்கான எம்.பி., சீட்டை உறுதி செய்து விட்டாராம். முதலில் ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் தான் காங்கிரசிற்கு கொடுக்க திமுக தலைமை நினைத்திருந்ததாம். ஆனால் தற்போதுள்ள கூட்டணிக்குள் குழப்பமான சூழலில், எம்.பி., சீட் வேண்டுமானால் தருகிறோம். ஆட்சியில் பங்கு பற்றி பேசக் கூடாது என சொல்லி தான் காங்கிரஸ் தரப்பை திமுக ஆஃப் செய்து வைத்துள்ளதாம். அதனால் இந்த ராஜ்யசபா தேர்தலை வைத்து கூட்டணிக்குள் நிலவி வரும் சலசப்பிற்கு திமுக முடிவு காண நினைத்து விட்டதாம்.
அதிமுக தரப்பை எடுத்துக் கொண்டால், அங்கு ஏற்கனவே அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக டீல் பேசி முடிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் பாமக சார்பில் அன்புமணி அல்லது அவரது கட்சியில் யாருக்காவது சீட் ஒதுக்கப்படலாம். அல்லது ராமதாஸ் தரப்பு பாமக.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட், தேமுதிக.,விற்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி கூட்டணிக்குள் அனைவரையும் கொண்டு வந்து, அடுத்த மாதம் பிரதமரின் தமிழக வருகைக்கு முன் கூட்டணியை முழுமை செய்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது.
Tamil Poem: பூவே பொன்பூவே
அதிமுக மயமாகும் தவெக.. கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்.. இன்று இணைகின்றனர்!
Tamil Short Story: அழகு கோலம்!
Tamil Poem: மன(தின்)வலி
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!
தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’
Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?
பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!
{{comments.comment}}