சென்னை: திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சுதந்திர தினத்தையொட்டி தங்களது டிவிட்டர் டிபியை வித்தியாசமான முறையில் மாற்றியுள்ளனர்.
"INDIA" என்ற பெயர் பிரதானமாக இருக்கும்படி டிபியை வடிவமைத்துள்ளனர். மூவண்ணக் கொடியின் பின்னணயில் மேலே கொட்டை எழுத்துக்களில் இந்தியா என்றும் கீழே United we stand என்ற வார்த்தையையும் வடிவமைத்துள்ளனர்.
நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று பலரும் டிபியை தேசியக் கொடியின் வண்ணத்திற்கு மாற்றி வருகின்றனர். அந்த வகையில் திமுகவினரும் மாற்றி வருகின்றனர். ஆனால் திமுகவினர் மாற்றி வரும் டிபியில் ஒரு உத்தியைக் கடைப்பிடித்துள்ளனர். அதுதான் தங்களது தேசிய அளவிலான கூட்டணியின் பெயரை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் "INDIA" என்பதை பெரிதாக வைத்துள்ளனர்.
பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தங்களது கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிட்டு நாட்டையே பரபரப்பாக்கினர் என்பது நினைவிருக்கலாம். அது முதல் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் இந்தியா என்ற பெயரை உச்சரிக்கும்போதெல்லாம் தங்களது கூட்டணியை மக்கள் நினைவில் கொள்ளும்படியாக அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சுதந்திர தினத்தையொட்டி டிபியை மாற்றியுள்ள போதும் கூட அதே உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர். சுதந்திர தினத்தைக் கொண்டாடியது போலவும் ஆச்சு, இந்தியா என்ற பெயரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது போலும் ஆச்சு என்று ஒரே கொண்டாட்டத்தில் இரட்டிப்பு சந்தோஷத்தை அவர்கள் அடைந்துள்ளனர்.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}