சென்னை: கடின உழைப்பு மற்றும் பாதை குறித்து தெளிவாக புரிந்தால் தான் எல்லோரும் கொண்டாடும் மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ளார் விஜய். அதே தெளிவோடும், உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு அட்வைஸ் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் புதிதாக கட்சி ஆரம்பித்து 2026ம் ஆண்டு தேர்தலில் களம் காண திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார். இவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். விஜய் ஆரம்பித்த தவெக கட்சி குறித்து பலதரப்பட்ட கருத்துகளை ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கூறி வருகின்றனர்.
ஒரு சிலர் விஜய் கட்சிக்கு வாழ்த்துகளையும், அவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவர் கட்சி ஆரம்பித்ததற்கு எதிராக கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில், தவெக மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இன்னும் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை, அறிவிக்கப்படவும் இல்லை.
இந்நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து திமுக எம்பி கனிமொழி கருத்து ஒன்றை கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு விருது வழங்கப்பட்டது.
அப்போது, விஜய்யின் அரசியல் வருகை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு அதற்கான உழைப்பு, அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}