ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதிக்கு.. தலா ரூ. 1 லட்சம் நிதி வழங்க.. திமுக எம்பிக்கள் முடிவு!

Dec 06, 2024,06:42 PM IST

சென்னை: மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார் .


கடந்த 29ஆம் தேதி வங்க கடலில் பெஞ்சல் புயல் உருவானது. இந்தப் புயலின் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அதிக கன மழை பெய்த பகுதிகளில் கடுமையான பொருட் சேதங்களும் ஏற்பட்டது. இந்த புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.




மழைநீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அப்புறப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் மழைநீர் தேங்கி இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் மு க ஸ்டாலின்  ரூ. 2000 கோடி இடைக்கால நிவாரண நிதியாக விடுவிக்க வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் இன்று சென்னை வரும் மத்திய குழு நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் வெள்ள நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியதை அடுத்து திமுக எம்பிகளும் வெள்ள நிவாரண நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்பிக்கள் வெள்ள நிவாரண நிதிக்கு தலா  ஒரு லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

news

தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?

news

கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!

news

குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!

news

வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!

news

தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!

news

இதற்கு மேல்....!

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்