காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை சீட்.. திட்டவட்ட முடிவில் திமுக.. எப்போது பேச்சுவார்த்தை?

Feb 28, 2026,11:29 AM IST

சென்னை: திமுக கூட்டணியில் இன்று முக்கிய அம்சமாக, காங்கிரஸ் கட்சியுடன் திமுக மேலிடம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  காரணம் இன்று 2வது சுற்று பேச்சுவார்த்தைக்கு 2 கூட்டணிக் கட்சிகளை திமுக மேலிடம் அழைத்துள்ளது.


2026 சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் திமுகவில் நடந்து வருகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்துதான் இந்தப் பேச்சுவார்த்தை எப்போதும் தொடங்கும். அதேபோல இந்த முறையும் முஸ்லீம் லீக் கட்சியுடன்தான் முதலில் பேச்சு நடந்தது. இதையடுத்து அடுத்தடுத்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.


இந்த நிலையில் முக்கியக் கட்சியாக காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. இரு கட்சிகளுக்கும் இடையே ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றாலும், கூட இரு தரப்பும் தத்தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன




கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை தனது எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறது. தொடக்கத்தில் 40 முதல் 45 தொகுதிகள் வரை கோரிய காங்கிரஸ், தற்போது குறைந்தபட்சம் 30 முதல் 35 இடங்களையாவது பெறுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.


ஆனால் திமுகவோ 25 சீட்தான் தரப்படும். புதிய கட்சியாக தேமுதிக வந்துள்ளதால் உங்களுக்கு மட்டும் இல்லை, எல்லோருக்குமே பழைய அளவில்தான் சீட் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்காமல் உள்ளதால் மேலும் சில சீட்களைக் கூட்டி டீலை முடிக்க திமுக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே ஒரு ராஜ்யசபா சீட்டையும் திமுக வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


திமு கூட்டணியில் இன்னும் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றை 2வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இன்று மாலை வருமாறு திமுக மேலிடம் அழைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்