ஹலோ.. சாப்ட்டு டயர்டா இருக்கீங்களா.. வாங்க, இந்தப் புதிருக்கு பதில் சொல்லுங்களேன் பார்ப்போம்..!

Apr 06, 2024,03:09 PM IST
என்னங்க சாப்பிட்டு டயர்டா இருக்கீங்களா.. கண்டிப்பா இருக்கும்.. அடிக்கிற வெயிலுக்கு சாப்பிட்டதும் ரொம்பவே கஷ்டமாத்தான் இருக்கும்.. உங்களை ஜாலியாக்க எங்க கிட்ட ஒரு வழி இருக்கே.. வாங்க ஒரு புதிரைப் பார்ப்போம்.. அதுக்கு ஆன்சர் சொல்லுங்க.

விடுகதை என்பது ஓரிரு வார்த்தைகளில் ஒரு பொருளை பற்றி நேரடியாக விவரிக்காமல் மறைமுகமாக விவரிப்பதே ஆகும். மேலும் நமது அறிவுத்திறனை  தூண்டுவதற்காக தான் விடுகதைகள் உருவாக்கப்பட்டது. சங்க காலங்களில் விடுகதையை கேள்வியாகவும், கவிதை நடையிலும், இலக்கியமாகவும், பாடல் வடிவிலும், குறிப்பிடுவர். 



அதில் பல வகைகள் உண்டு.  அதாவது எப்படின்னா, விளக்க விடுகதைகள், ‌எதிர்மறை விடுகதைகள், தலைதப்பும் விடுகதைகள், கதையமைப்பு விடுகதைகள், உரையாடல் வகை, சொல் விளையாட்டு, நகை வினாக்கள், அறிவு வினாக்கள், புதிர்கள் இப்படி ஏகப்பட்ட வெரைட்டியை வச்சிருக்காங்க நம்மாளுங்க.

விடுகதையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுகதைகளை அனைவரும் ரசிப்பார். ஒருவர் வினாக்கணைகளை தொடுக்கும்போது அதற்கு நாம் பதில் அளிக்க முயல்வோம். நமக்கு பதில் தெரியவில்லை என்றாலும்கூட அதற்கு என்ன பதில் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருப்போம். இதனால் விடுகதைகள் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இது தவிர தற்காலத்தில் நவீன கவிதை என்ற வடிவில் மொக்கை ஜோக்குகளும் கவிதை அமைப்பில் விடுகதையாக கேட்கப்படுகிறது. இதனை பல்வேறு தரப்பினரும் ரசித்து வருகின்றனர். ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்டால், அதற்கு நமக்கு விடை தெரியும். ஆனால் அதனை எவ்வாறு விளக்கிக் கூறுவது என்பதுதான் தெரியாது என்ற  வடிவில்  நவீன விடுகதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் சமீப காலமாக இந்த வடிவமைப்பில் தான் விடுகதைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 

ஓகே ஓகே இப்ப நம்ம நேரடியா விடுகதைக்கை போய்ருவோம்..  இதுதாங்க அந்த புதிர் விடுகதை..

இது நான்கு எழுத்து கொண்ட ஒரு பெயர்.. அது கிடைத்தால் பணக்காரனாகலாம்.. அந்தப் பெயரில் முதல் எழுத்தை மட்டும் நீக்கிவிட்டு படித்தால் அது ஒரு தொழிலின் பெயராகும். இரண்டாவது எழுத்தை மட்டும் படித்தால் அது ஒரு மாதத்தின் பெயர் வரும். இரண்டாவது எழுத்தை மட்டும் நீக்கிவிட்டு படித்தால் அது ஒரு இயற்கை சீற்றத்தின் பெயர். முதல் மற்றும் கடைசி எழுத்தை மட்டும் சேர்த்து படித்தால் அது தாவரத்தின் பெயர்.

இதுதாங்க  அந்தப் புதிர்.. விடை என்ன.. யோசிச்சுக் கண்டுபிடிங்க பார்ப்போம்!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்