உலக சதுப்பு தின நாள் இன்று .. எதுக்காக இதைக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

Feb 02, 2024,03:40 PM IST

சென்னை: உலக சதுப்பு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சரி எதற்காக இப்படி ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள் என்று தெரியுமா?


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 2ஆம் தேதியை உலக சதுப்பு தினம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறோம். இந்நாளில் சுற்றுச்சூழலின் சமநிலையை பராமரிப்பதற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக சதுப்பு தின நாள் அனுசரிக்கப்படுகிறது.


இந்த பிரபஞ்சத்தில் பூமி நமக்கு பல வளங்களை கொடுத்துள்ளது . அப்படிப்பட்ட பூமிக்கு சதுப்பு நிலங்கள் பல்வேறு நன்மைகளை செய்கின்றது. ஆண்டு முழுவதும் சதுப்பு நிலங்களில் நீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் பூமியை பாதுகாக்கும் சதுப்பு நிலங்களை அழிக்காமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.


சதுப்பு நிலம் என்றால் என்ன?




நீர் நிறைந்த கடலும் அல்லாத, நிலங்களும் அல்லாத குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியையே சதுப்பு நிலங்கள் என்கிறோம்.


உலகின் மொத்த பரப்பளவில் 6% பகுதிகள் சதுப்பு நிலங்களாகவே உள்ளன. இதில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களில் 1950 மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்தியாவில் மட்டும் 25 சதுப்பு நிலங்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காடு மற்றும் கோடியக்கரை சரணாலயங்கள் இதில் முக்கியமானவை. இந்த சதுப்பு நிலங்களில் ஆண்டு முழுவதும் நீர் சுரந்து கொண்டே இருக்கும். இந்த ஈர நிலங்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கான சரணாலயமாக திகழ்கின்றன. இங்கு அரிய வகை பறவைகள், விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள் போன்றவைகளுக்கு புகலிடமாக திகழ்கிறது.


இந்த சதுப்பு நிலங்களை இரு பிரிவுகளாக பிரிக்கிறோம். ஒன்று இயற்கையாக உருவானவை. மற்றொன்று மனிதனால் உருவாக்கப்பட்டவை. இதனை ஏன் அவ்வாறு பிரிக்கிறார்கள்.. அவை என்ன என்ன.. என்று பார்ப்போம்..


காடுகள் மற்றும் குட்டைகளில் தேங்கும் நீர் போன்றவை இயற்கையால் உருவானவை. ஏரிகள், குளங்கள், ஓடைகள், குவாரிகள், தேங்கும் நீர் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. 


சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்ன?


ஈர நிலங்களினால் பூமிக்கு நன்மை ஏற்படுகிறது. பூமியில் உள்ள வெப்பம் குளிர்விக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. இந்த ஈர நிலங்கள் பூமிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. மழைக் காலங்களில் உள்ள நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் வெள்ளத்தின் போது ஏற்படும் சேதங்களை தடுத்து, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. சதுப்பு நிலங்களில் வாழும் உயிரினங்கள் பல்லுயிர் தன்மையை கொண்டுள்ளதால் இந்த நிலம் மனிதனின் நுரையீரல் போன்றது.


எப்போது சதுப்பு நில தினம் உருவானது?


உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் ராம்சர் ஒப்பந்தம் 1971 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் கையெழுத்தானது. இந்த மாநாடு பிப்ரவரி 2ஆம் தேதி ஈர நிலங்களை பாதுகாத்தல் தொடர்பாக நடைபெற்றது. இந்த ராம்சர் ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ஆம் தேதியை ஒவ்வொரு வருடமும் உலக சதுப்பு தின நாளாக கொண்டாடப்படுகிறோம்.


இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி உலகம் எங்கும் சதுப்பு நில தினம் சர்வதேச தினமாகக் கொண்டாட ஐநா பொதுச் சபையில் ஏற்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சதுப்பு தின நாள்  அனுசரிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

உயிர் மூச்சு என்று நினைக்கின்ற என் உத்தமிக்கு அடியேன்!

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்