காரைக்குடி அண்ணாமலையார் நகரில் லொள் லொள் தொல்லை.. அதிகரிக்கும் நாய்கள்.. End card எப்பப்பா?

Jan 23, 2025,05:01 PM IST

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சிகுட்பட்ட அண்ணாமலையார் நகர், பாரி நகரில்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பேரூராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பொதுவான பிரச்சினையாக ரோடு இல்லை, குடிநீர் பற்றாக்குறை, கழிவு நீர் வடிகால் வசதி சரியில்லை என்றுதான் இருக்கும். ஆனால் தமிழ்நாடு முழுவதுமே தற்போது மக்களுக்கு எழுந்துள்ள பெரிய பிரச்சினையாக இருப்பது நாய்கள் தொல்லைதான். எந்த ஊருக்குப் போனாலும் தெரு நாய்கள் தொல்லையைத்தான் மக்கள் பெரிதாக பேசுகிறார்கள். அந்த அளவுக்கு நாய்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது, அவற்றால் கடிபடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.




காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட பாரி நகர், அண்ணாமலையார் நகர், நாகம்மை நகர்  உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்து செல்பவர்களையும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்களையும் தெரு நாய்கள் விரட்டி கடிக்க பாய்கின்றன.


இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் கூட்டமாக படுத்து உறங்கும் நாய்கள் தனியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒன்று சேர்ந்து குரைக்கின்றன. நிம்மதியாக யாராலும் நடமாட முடியவில்லை. 


மேலும் தெரு நாய்களுக்குள் சண்டை நடக்கும் போது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மீது நாய்கள் வந்து விழும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் சிறுவர்கள் பீதி அடைகின்றனர். நாய்ச் சண்டையெல்லாம் பார்க்கவே படு பயங்கரமாக இருக்கிறது. வயதான பெரியவர்களும் காலை, மாலை , பகல்,இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் சாலைகளில் நடந்து செல்கின்றனர். தெருக்களில் சண்டையிடும் நாய்கள் எங்கே நம்மீது விழுந்து கடித்துவிடுமோ என்று அச்சத்துடனே நடந்து சென்று வருகின்றனர்.


இரவு நேரங்களில் அதிக அளவிலான நாய்கள் கூட்டமாக குரைத்துக்கொண்டே செல்வதால் வீடுகளில் உள்ள மக்களுக்கும் தொந்தரவாக உள்ளது.இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. பேரூராட்சி  நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது வழக்கம். ஆனால் பேரூராட்சியில்  கருத்தடை சிகிச்சை செய்யப்படவில்லை. இதனால் நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.                          


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கோட்டையூர் பேரூராட்சி  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்