அயோத்தி : ஜனவரி 22 ம் தேதி வரை பொது மக்கள், பக்தர்கள் என யாரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வர வேண்டாம். குறிப்பாக பிரன பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்திர பிரதேசத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரம்மாண்டமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது. இதை காண்பதற்காக மிக அதிக அளவிலான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 22 ம் தேதி ராமரின் புதிய சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வைபவம் ஜனவரி 22 ம் தேதி பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.
கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு, கோவிலும் ஜனவரி 22 ம் தேதி திறக்கப்பட்டாலும் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுவதுமாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என ராமர் கோவில் டிரஸ்ட் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த கனவு நிஜமாக உள்ளதால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள வருவார்கள். இதனால் சுற்றுலா பயணிகளால் அயோத்தி நகரமே நிரம்பி வழியும்.
அனைத்து பொருட்களின் விலையும் , தங்கும் இடங்களின் கட்டணமும் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்தே காணப்படும். இதனால் மக்கள் அனைவரும் அயோத்தியை சுற்றி உள்ள கோவிலுக்கு மட்டும் செல்லும் படியும், ஜனவரி 22 வரை மக்கள் யாரும் அயோத்தி நகருக்கு வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் வருவார்கள். இது தவிர 4000 புரோகிதர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 4.40 ஏக்கரில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவருக்கும் உணவு, தங்குமிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள், பாதுகாவலர்கள், கடைகள் வைப்போர் என பலரும் கூடுவதால் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மற்றவர்கள் யாரும் ஜனவரி 22 ம் தேதி வரை அயோத்தி நகருக்கு வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}